கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது!! குவியும் பாராட்டுக்கள்!!

 
சுந்தர் பிச்சை

 

இந்தியாவின் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று விருதுகள் இடம்பெற்றுள்ளன. பொதுசேவை, தொழில் துறை, கலைத்துறை, அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டன.

சுந்தர் பிச்சை

 

இந்த விருது பட்டியலில் 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.  அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்ஜித் சிங், பத்ம பூஷன் விருதை சுந்தர் பிச்சையிடம் வழங்கினார்.

சுந்தர் பிச்சை

 

இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், 'நான் எங்கு சென்றாலும் எனது இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்' இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. என்றார்.

From around the web