பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மரணம்!

 
ajay paridha

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல விஞ்ஞானியும்,  இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்சஸ் இயக்குநருமான டாக்டர் அஜய் பரிதா கவுகாத்தியில் காலமானார். ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பகபன்பூர் கிராமத்தில் பிறந்தவர்  அஜய் பரிதா.  அவருக்கு வயது 58. அசாம் மாநிலத் தலைநகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார்.  

அஜய் பரிதாவின் அகால மறைவுக்கு ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிபி ஹரிசந்தன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பல உயரதிகாரிகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன்  பட்நாயக் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்  பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் இயக்குநருமான புவனேஸ்வர் அஜய் பரிதா காலமானதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல்  டாக்டர் அஜய் பரிதாவின் மரணத்தை உறுதிப்படுத்திய முன்னாள் டிஎம்இடி பேராசிரியர் சிபிகே மொஹந்தி, கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார். இதேபோல் பல தலைவர்களும் விஞ்ஞானிகளும் அவருக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web