பிரபல நடிகரின் மனைவி மரணத்துக்கு பேலியோ டயட் தான் காரணமா?! மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 
பரத்

பிரபல சின்னத்திரை நடிகர் பரத்தின் மனைவி ப்ரியதர்ஷினி மரணமடைந்த நிலையில், அவர் பேலியோ டயட் மேற்கொண்டிருந்த காரணத்தினால் மரணமடைந்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. பேலியோ டயட் கடைப்பிடிப்பதினால் மரணம் ஏற்படுமா? இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று விசாரணையில் தினமாலை டீம் இறங்கியது.

பிரபல சீரியல் நடிகர் பரத் கல்யாண், யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உட்பட  சில திரைப்படங்களிலும்  நடித்துள்ளார். 90களில் வெளியான சொந்தம் சீரியல் முதல் 2010ல் வெளியான வம்சம் வரை இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை தற்போதுகனா காணும் காலங்கள் 2 வெப் சீரிஸில் நடித்து வருகிறார். 

பரத் கல்யாண்
இந்நிலையில், அவருடைய மனைவி ப்ரியதர்ஷினி உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். உடல் எடையைக் குறைக்க பரத்தின் மனைவி ப்ரியதர்ஷினி, தீவிரமாக பேலியோ டயட் கடைப்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. 

பரத்

பரத் கல்யாண் - ப்ரியா தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  பிரியாவின் திடீர் மரணம் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பேலியோ டயட் மேற்கொண்டிருக்கும் பலரையும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. 

பேலியோ டயட் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பேலியோ டயட்டைக் கடைப்பிடிப்பவர்கள் காய்கறிகள், நட்ஸ், இறைச்சி வகைகளை உட்கொள்ளலாம். ஆனால், பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.  உடல் எடையைக் குறைக்க விரும்பும் பலரும், இந்த டயட்டில் சமீப காலங்களாக அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சரியான அறிவுறுத்தலோ, மருத்துவரின் ஆலோசனைகள், கண்காணிப்போ இல்லாமல், கேள்விப்படுகிற விஷயங்களை வைத்து பேலியோ டயட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். ஒருவரின் பேலியோ டயட் உணவு சார்ட், இன்னொருவருக்கு நிச்சயமாக  பொருந்தாது. ஒவ்வொருவருத்தரும் கட்டாயம் ரத்த பரிசோதனைகளைச் செய்த பிறகே பேலியோ டயட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கொளஸ்ட்ரால் அளவு, கிரியாட்டினின் அளவு, மெட்டபாலிசம் போன்றவை நபருக்கு நபர் மாறுபடும். அதைப் பொறுத்தே அவர்களது பேலியோ உணவுகள் அமைகின்றன. பழங்களை பேலியோ டயட்டில் முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள். பாலில் இருக்கும் கால்சியம், பழங்களில் இருக்கும்  வைட்டமின்கள் போன்றவை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது என்று மேலும் அதிர வைக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web