பெற்றோர்களே உஷார்!! பள்ளி மாணவர்களிடையே தீவிரமாக பரவும் இருமல், காய்ச்சல்!!

 
மாணவிகள்

சமீப காலமாகவே சென்னையில் வசிக்கும் குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. சுமார் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் இந்த உடல்நலக் குறைவு குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘‘பருவநிலை மாற்றம் மற்றும் வானிலையில் நிலவும் மாற்றம் காரணமாகவே இது போன்ற உடல் உபாதைகளால் குழந்தைகள் தவித்து வருகின்றனர்’’ என்கிறார்கள்.

மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!

கடந்த 2 ஆண்டுகாலமாக மக்கள் கொரோனா பரவல் காரணமாக சமுக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்தனர். அதன் காரணமாக காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் குறைந்து இருந்தன. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பொதுமக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

இதனால் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சுவாச நுண் குழல் அழற்சி வைரஸ் உள்ளிட்ட புதிய வகை வைரஸ்கள் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகள் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். சுமார் ஒரு வார காலம் நீடிக்கும் இந்த உடல்நலக் குறைவு காரணமாக குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது மற்ற மாணவர்களுக்கும் இந்த காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுகிறது.

காய்ச்சல்

இதில் இருந்து தப்பிக்க எப்போதும்  கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்’’ என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.சமீப காலமாக குழந்தைகள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் குவிவதை காண முடிகிறது. இதனால் பெற்றோர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web