பெற்றோர்களே உஷார்!! வறட்டு இருமல், சளியால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

 
இருமல்


தமிழகத்தில் கொரோனா பரவல் முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் அதற்கான  நோய் பாதிப்புகள் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி இவைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளுக்கு தற்போது வைரஸ் காய்ச்சல், இருமலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சமீபகாலமாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள்  சளி, இருமல் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் மருத்துவமனை வாசலில் தவம் கிடக்கின்றனர். அதிலும் குழந்தைகள் நல மருத்துவர்களிடம் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி உள்ளது. 

இருமல்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்  மழை ஒரு வாரமாக பரவலாக பெய்து வருவதால் தட்பவெப்ப நிலையும் மாறியுள்ளது.  இக்காலக் கட்டத்தில் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரிப்பதால்  டெங்கு பாதிப்பும் ஏற்படக் கூடும்.இதனைத் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. தற்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து காஞ்சி காமகோடி குழந்தைகள் நல துணை மருத்துவ இயக்குனர் ஜனனி சங்கர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் இருமல் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் வைரல் தொற்று பாதிப்பால் தொடர் வறட்டு இருமலுடன் வருகிறார்கள். ஜூலையில் குழந்தைகளிடம் பரவத் தொடங்கிய வறட்டு இருமல் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.  இதனால் பெற்றோர், பள்ளிகள் பயப்பட தேவையில்லை. சூடான தண்ணீர், தேன் இவைகளை தொடர்ந்து கொடுத்து வரலாம். மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் இருமல் சிரப்பு வாங்கி கொடுக்கலாம். மல்டிபிள் இருமல் சிரப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.  பள்ளி செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும்.

இதனை பள்ளிகளும், பெற்றோர்களும் உறுதி செய்ய வேண்டும். எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர்  எழிலரசி விடுத்த செய்திக்குறிப்பில் வைரல் காய்ச்சல் தொடங்கக்கூடிய சீசன் இது. பொதுவாகவே குழந்தைகளுக்கு மழைக்காலம் தொடங்கும் செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். நவம்பர், டிசம்பரில் படிப்படியாக குறைய தொடங்கும். இது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்று  தான். கொரோனா பாதிப்பு காரணமாக  பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக வைரல் காய்ச்சல் பாதிப்பு சற்றே குறைந்திருந்தது. இதனால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து புறநோயாளிகள் பிரிவில் அதிக குழந்தைகள் வருகிறார்கள். இது  குறித்து பெற்றோர் பயப்பட தேவையில்லை. 4, 5 நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும்.

மாஸ்க்

அருகில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகளில் மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியதும் அவசியம். இது தவிர சுற்றுப்புறந்த்தில் கொசு உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்.  மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்களை தவிர்ப்பது உத்தமம். வெதுவெதுப்பான வீட்டு உணவுகளை சாப்பிடுவது நல்லது. உடல் முழுவதும் மூடும் வகையில்  ஆடை அணிந்து குழந்தைகளை இரவில் தூங்க வைப்பது நல்லது.  மழை மற்றும் குளிர்காலம் முடியும் வரை குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால்  வைரல் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web