பெற்றோர்களே உஷார்!! மிரட்டும் மர்மக்காய்ச்சல்!! நிரம்பி வழியும் குழந்தை மருத்துவமனை வார்டுகள்!!

 
காய்ச்சல்

தமிழகம் மற்றும் புதுவையில்  கடந்த சில வாரங்களாக சளி, இருமல், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  காலநிலை மாறி, மாறி வருவதால் சீதோஷ்ணநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புக்கள் அதிகம் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  சென்னையில்  அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற வரும் குழந்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  எழும்பூர் குழந்தைகள் வார்டில்  உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதே போல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் குழந்தைகளிடையே காய்ச்சல் அதிதீவிரமாக பரவி வருகிறது

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மர்மக்காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுவையில் இதன் ஒரு பகுதியாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. 

பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் மீண்டும் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் எச்சரிக்கையாக செயல்படவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

காய்ச்சல்

இவர்கள் மூலம் வீட்டில் இருக்கும் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காய்ச்சல் பரவி வருகிறது. விடுமுறை அளிக்கப்படாததால் அவர்கள் காய்ச்சலுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனால் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிறப்பு வார்டுகள், சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மர்ம காய்ச்சல் அதிகளவில் பரவி வருவது குறித்து சுகாதாரத்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பருவ மழையால் உருவாகும் வைரஸ் காய்ச்சல் தான் எனவும்,  இதனை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும்  அறிவுறுத்தியிருந்தது.

மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!

அதே சமயம் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில்  பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மானவர்களுக்கு விடுமுறை அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 10 நாட்களாக குழந்தைகள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு  வருகின்றனர். அதிலும்  காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இது அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டில்  வைத்து கைகளை சுத்தம் செய்வது, முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிக்க செய்வதன் மூலம் இதனை பெருமளவு  குறைக்கலாம். எனத் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் வார்டுகள் அதிதீவிரமாக நிரம்பி வருகின்றன. மக்கள் இதனை கருத்தில் கொண்டு முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொண்டை வறட்சி, வலி, சளி, காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சாதாரண காய்ச்சல் என்று அலட்சியப்படுத்தாமல், உடனடியாக இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web