இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்!! ஜிஎஸ்டி, அக்னிபாத் பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!!

 
பாராளுமன்றம்

இந்தியாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பாராளுமன்றக் கூட்டத் தொடர்
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் அக்னிபாத், எரிபொருள் விலை உயர்வு  பிரச்சனைகளை எழுப்ப  திட்டமிட்டுள்ளன. இது குறித்து பிரதமர் மோடி விடுத்த செய்திக்குறிப்பில்  பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பாராளுமன்றம்

 தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட்  12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது சார்பில்  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.

கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி.க்கள் மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்பி.க்கள் டிஆர்.பாலு, திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கலந்து கொண்டனர்.  பாராளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது குறித்து விடுத்த செய்திக்குறிப்பில் , ''இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய  அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 14 மசோதாக்கள் தயாராக உள்ளன. இவை அனைத்தின் மீதும் ஜனநாயக ரீதியில் விவாதம் நடத்தப்பட உள்ளது .  

அதே நேரம், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான அக்னிபாதை திட்டம், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, ஆகியவற்றை தவறாக பயன்படுத்துதல், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள், விலைவாசி உயர்வு உட்பட 13 பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத் தொடர் சமயத்தில்  ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web