மக்களே உஷார்… 3 மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை…

 
மழை

வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில்  அடுத்த  48 மணி நேரத்தில் வலுபெறக்கூடும்.

மழை

இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழக - புதுவை  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 18-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 19-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த வகையான மழை? முழு தொகுப்பு!!

20-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.  இதனிடையே 21-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது.      

 

From around the web