பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!! மீண்டும் ஜெட் வேகமெடுக்கும் கொரோனா!!

 
கொரோனா

 2019 டிசம்பரில் சீனாவின் வூகாண் நகரில்  தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டுள்ளன.  இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக பரவுவதை தடுக்க முடியவில்லை.

கொரோனா

தற்போது சீனத்தலைநகர் பீஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் உணவகங்கள்,  வணிகவளாகங்கள்,  கடைகள், மூடப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டர்   மூடப்பட்டிருந்தது. நவம்பர் 27ம் தேதி மீண்டும் செயல்பட இருந்த நிலையில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 கொரோனா

சீனாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில்  மட்டும் 24263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கில்  அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web