மக்களே உஷார்!! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
வெள்ள அபாயம்

தமிழகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால்  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது . காவிரியில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23000 கன அடி தண்ணீரும்,  வினாடிக்கு 77000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ள அபாயம்
காவிரி ஆற்றில் இரு கரைகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.  தற்போது 400 கன அடியாக அது குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும். இதனை கருத்தில் கொண்டு காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறப்பு
அதன்படி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரமாக வசிப்பவர்கள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web