மக்களே உஷார்!! பொது இடங்களில் இதை செய்தால் அபராதம்!! கடும் எச்சரிக்கை!!

 
சென்னை

தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மேலும் அழகுப்படுத்த தமிழக  அரசு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக  மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வேண்டாதவைகளை களையவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுவர் விளம்பரங்களை தவிர்த்து   சென்னையில் உள்ள அனைத்து சுவர்களிலும் நமது  நாட்டின் சிறப்பு அம்சங்களையும் சின்னங்களையும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக சிங்கார சென்னை என்ற பெயரில் வரையப்பட்டு வருகின்றது.

இந்த வகையான  சுவர் ஓவியங்கள்  பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகர தூய்மைக்காகவும், அழகுடன் பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சென்னை மெரினா கடற்கரை, மற்றும்  முக்கிய  சுற்றுலா தலங்களையும் அரசு  மேம்படுத்தி வருகின்றது. பெருநகர  சென்னை  மாநகராட்சியின்  சார்பில் சென்னை  மாநகரை  தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்  குப்பைகளை முறையாக அகற்ற அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ரது. அதில் பொது இடங்களில் குப்பை கொட்டு்வதால் ஏற்படும் சீர் கேட்டை சுட்டிகாட்டியுள்ள  மாநகராட்சி,  பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிற்க வேண்டும்என்றும்,  சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என சென்னை எச்சரிக்கை விடுத்துள்ளது.மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய  நபர்களுக்கும் ரூ.22,22,810 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web