15 மாவட்ட மக்களே உஷார்!! இன்று இடி , மின்னலுடன் கனமழை!!

 
தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

 

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்துார், திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய  கன மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை  மாவட்டங்களில் ஆகஸ்ட் 27 ம் தேதி நாளை கன மழை பெய்யக்கூடும் .


அத்துடன் ஆகஸ்ட்  29 வரை இந்த மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web