28 மாவட்ட மக்களே உஷார்!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
மழை

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் வங்கக்கடலில் உருவாகியிருக்கும்  காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று அதிகனமழையும் பெய்யத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகம்,  டெல்டா மாவட்டங்களில் பெருமழை பெய்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சில பகுதிகளில்  குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மழை
இந்த மழை மேலும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , வேலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யலாம் என்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். நவம்பர்  15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை  மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 16ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web