8 மாவட்ட மக்களே உஷார்!! வெளில போகும் போது குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நல்ல மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும் எனவும் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இடி மின்னல் மழை
அதே நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அத்துடன்  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். 


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக  35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்  இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை
அதே போல் இன்று முதல் ஆகஸ்ட் 4 வரை  குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள்  இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web