கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி!! உயர்நீதிமன்றம் அதிரடி !!

 
கள்ளக்குறிச்சி


தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி மர்மமான முறையில்  உயிரிழந்தார். இதற்கு நீதிகேட்டு பள்ளி வளாகத்தில்  நடத்தப்பட்ட போராட்டத்தில்  கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தால் பள்ளி வளாகத்தில் நின்ற வாகனங்கள், வகுப்பறைகள், ஆவணங்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி அந்தப்பள்ளி  உடனடியாக மூடப்பட்டது.

கள்ளக்குறிச்சி

மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை  காவல்துறை கைது செய்தது. தற்போது இந்த பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால் ஆய்வுக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இதன் அடிப்படையில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில்  பள்ளியில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில்லை எனவும் இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

அதன் பிறகு கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.  ஒரு மாதத்திற்குப் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் சில நாட்களுக்கு பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையை அறிவுறுத்தியுள்ளார்.  பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்களின் எண்ணிக்கை குறித்து மாவட்ட கலெக்டருடன் காவல்துறை, பள்ளி நிர்வாகம் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web