ஜல்லிக்கட்டை ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட்டில் மனு!! முதல்வர் அவசர ஆலோசனை!! பரபரக்கும் தலைமைச்செயலகம்!!

 
ஜல்லிக்கட்டு

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்கள் பண்டிகையை சிறப்பிக்கவும், விவசாயத்திற்கு உறுதுணையாக நிற்கும் காளைகளை கௌரவிக்கும் வகையில் இவை காலம் காலமாக நடத்தப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் முக்கிய மற்றும் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் வருடந்தோறும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும். இந்த போட்டி உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதுமட்டுமின்றி  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். பீட்டா உள்ளிட்ட  சில அமைப்புகளால் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழகத்தில் இதற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகே மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில்  நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு

இந்நிலையில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இதன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  அதில் தமிழக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web