ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி புகைப்படங்கள்!! கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி அலப்பறைகள்!!

 
ஹால்டிக்கெட்

பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள லலித் நாராயணன்ன மிதிலா என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதனுடன் இணைந்து செயல்பட்டு வரும் 3 கல்லூரிகளிலும் 3ம் ஆண்டு தேர்வுகள் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஹால்டிக்கெட்டுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

ஹால்டிக்கெட்

ஹால் டிக்கெட்டுகளை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்கள் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி, பீகார் மாநில கவர்னர் பாகுசவுகான் புகைப்படம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் பேசும்போது, மாணவர்கள் தங்களது புகைப்படங்களையும், தகவல்களையும் மீண்டும் பதிவேற்றம் செய்தால், அனுமதி சீட்டு வழங்கப்படும். இதில் சில குறும்புக்கார மாணவர்கள் தங்கள் புகைப்படத்திற்கு பதிலாக தலைவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களிடம் உரிய விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதிரடி நடவடிக்கையாக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றம்

கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, அம்மாநில கவர்னரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது யார் யார் என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web