கடலூரில் தவறான சிகிச்சையால் பார்வை பறிபோன பரிதாபம்… அலட்சியம் காட்டும் மருத்துவர்கள்…

 
தவறான சிகிச்சை

மூக்கு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பார்வை பறிபோன அதிர்ச்சி சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.   மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என கூறி உறவினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையத்தைச் சேர்ந்தவர் உமாவதி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் அரசு மருத்தவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சை செய்ததில் அவருக்கு  கண்பார்வை பறிபோனதால் ஒருமாதம் வரை அவரை மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

உமாவதி

இதனிடையே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இவர், தனக்கு கண்பார்வை இதுவரை திரும்பவில்லை  என்று மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மருத்துவர்கள், ரத்தக்கட்டு காரணமாக அப்படி உள்ளதாகவும், காலப்போக்கில் கண்கள் சரியாகிவிடும் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் 2 மாதங்களாகியும் இதுவரை கண்கள் இரண்டும் தெரியாததால், உமாவதி தனது உறவினர்களுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உயரதிகாரிகளை விசாரிக்க  உத்தரவிட்டார்.

உமாவதி

பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, கண் பார்வை பறிபோன பிறகு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில், கண்ணிற்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக கூறினர்.   மேற்கொண்டு மீண்டும் அறுவை சிசிக்சை செய்தாலும் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கிடைக்கும், என்று கூறினார். என்று வேதனை தெரிவித்தார். சமீபத்தில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா உயிரிழந்த சம்பவம் இன்னும் வடுவாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு தவறான சிகிச்சை சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

From around the web