பரிதவிக்கும் விமான பயணிகள்!! விமானங்கள் செல்வதில் சிக்கல்!!

 
விமானநிலையம்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு  முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதிகளில் சர்வதேச விமானநிலையம் முக்கியமானது.

விமான நிலையம்

இங்கு நாள் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் வந்து செல்வதுண்டு. நேற்று முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

விமான நிலையம்
இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய துபாய், கத்தார், பாங்காக், இலங்கை, சிங்கப்பூர் போன்ற விமானங்களும், திருச்சி, மதுரை, மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, அந்தமானுக்கு சென்று வரும்  உள்நாட்டு விமானங்களும் சுமார் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டுச் செல்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கி வருவதாக விமான நிலையத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web