இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க!! செப்டம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை!!

 
வங்கி விடுமுறை

இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகளின் விடுமுறை நாட்கள் ரிசர்வ் வங்கியால் கணக்கிடப்படுகின்றன. தற்போதைய வாழ்க்கை முறையில்  பலரும் வங்கி கணக்குகளின் மூலம் தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பலரும் வங்கிகளை சார்ந்து இருக்கும் சமயத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது சில சமயங்களில் பெரும் சிரமங்களை உருவாக்கி விடுகிறது.  ஆகஸ்ட் மாதம் நிறைவடைய சில நாட்களே உள்ளது. அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை தெரிந்து கொண்டால் அதற்கேற்ப  வங்கி வேலைகளை முடிவு செய்துகொள்ளலாம்

உஷார்!! தமிழகத்தில்  அக்டோபர் மாசம் 19 நாட்கள் தான் வங்கிகள் இயங்கும்!!
செப்டெம்பர் மாதம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இப்போதே திட்டமிட்டு கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின்படி, செப்டம்பரில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற விடுமுறை நாட்களுக்கான விடுமுறை நாட்களை குறித்துக் கொள்ளலாம். செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 8 விடுமுறைகள் உள்ளன, இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.  இதன்படி செப்டம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளன.  இந்த விடுமுறைகளானது மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


செப்டம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்: 

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!
செப்டம்பர் 1- விநாயக சதுர்த்தி 
செப்டம்பர் 2- கோவாவின் பனாஜி வங்கி விடுமுறை 
செப்டம்பர் 4- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 6- ஜார்கண்ட்,  திருவனந்தபுரம் மற்றும் கொச்சி
செப்டம்பர் 7 -சிக்கிமில் இந்திரஜாதா விடுமுறை
செப்டம்பர் 8 -இந்திரஜாதா சிக்கிம் விடுமுறை 
செப்டம்பர் 9- காங்க்டாங்கில் விடுமுறை 
செப்டம்பர் 10-  ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தி
செப்டம்பர் 11- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 21- ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் 
செப்டம்பர் 25 -ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 26- நவராத்திரி . மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

 
From around the web