மீண்டும் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா! புள்ளிகள் அடிப்படையில் கோப்பையை இழந்தார்!

 
பிரக்ஞானந்தா

மீண்டும் ஒரு முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மயாமியில், ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘கிரிப்டோ’ கோப்பை தொடர் நடக்கிறது. இதில் நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உள்ளிட்ட உலகின் 8 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். 

முதல் நான்கு சுற்றில் வெற்றி பெற்ற தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஐந்தாவது சுற்றில் சீனாவின் குவாங் லீம் லீயிடம் தோல்வியடைந்தார். ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா, போலந்தின் ஜான்–கிரிஸ்டோப் டுடா மோதினர். இதன் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 47வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார். பின் சுதாரித்துக் கொண்ட பிரக்ஞானந்தா, அடுத்த இரு போட்டிகளை டிரா செய்தார்.

பிரக்ஞானந்தா

தோல்வியை தவிர்க்க 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். சாமர்த்தியமாக விளையாடிய இவர், 44வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து போட்டி 2–2 என சமன் ஆனது.வெற்றியாளரை முடிவு செய்ய டை பிரேக்கர் நடத்தப்பட்டது. இதன் இரு போட்டியிலும் ஏமாற்றிய பிரக்ஞானந்தா 2–4 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கார்ல்சன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்திலும் இருந்தனர். இதனால் இறுதிப் போட்டியை கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா எதிர்கொண்டனர். 7-வது சுற்றான இறுதிப்போட்டி நேற்று (ஆகஸ்ட்  21) நடைபெற்றது. இதில் பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வென்று வெற்றியைத் தனதாக்கினார் பிரக்ஞானந்தா.


கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்தார், ஒரு புள்ளியில் துரதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை தவற விட்டார். உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக வீழ்த்தி தமிழத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web