நாய்களை கொன்ற ஊராட்சி மன்ற தலைவி!! அதிர்ச்சி சம்பவம்!!

 
நாய்கள்

நாய்கள் என்றாலே நன்றி உள்ள பிராணி என்று கூறுவார்கள். பொதுவாக நாய்கள் வளர்போன் அதனிடம் அன்பாக இருப்பார்கள். நாய்களும் தனது உரிமையாளரிடம் அன்பாக கொஞ்சி விளையாடும். ஒரு சிலர் நாய்களை வீட்டின் உள்ள ஒரு நபர் போல் பாவித்து பழகுவார்கள். அடிக்க மாட்டார்கள், கட்டிபோட மாட்டார்கள். ஆனால் விருதுநகரில் 30 தெரு நாய்களை ஊராட்சி மன்றத் தலைவி, கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறி நாய்கள்

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் விலங்குகள் நல ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் உள்பட நான்கு பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்களை சிலர் சுருக்கு கம்பி வைத்து பிடித்து அதனை தலையில் அடித்து கொடூரமாக கொன்று புதைத்து வருவதாகவும், அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ப்ளூ கிராஸ் அமைப்பை சேர்ந்த சுனிதா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட சுனிதா நாய்களை கொன்றது தொடர்பாக சுனிதா சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் விசாரணை நடத்தினர்.

நாய்கள்

விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவி நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் உட்பட 4 பேர் சங்கரலிங்கபுரத்தில், சுற்றி திரிந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த 30க்கும் மேற்பட்ட தெரு நாய்களைக் கொன்று, ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. புதைக்கப்பட்ட நாய்களின் உடல்கள், பின்னர் காவல்துறை உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு மேற்கொண்ட பிறகு, அவை மீண்டும் புதைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் உட்பட 4 பேர் மீது விலங்குகளை துன்புறுத்தி கொலை செய்தல், மிருகவதை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தனர். சங்கரலிங்கபுரத்தில், தெரு நாய்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும் அவர்களாகவே தெரு நாய்களைப் பிடித்து, அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web