சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்!! இல்லத்தரசிகள் கடும் அவதி!!

 
சிலிண்டர்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். அந்த வகையில் இந்திய  எண்ணெய் நிறுவனம் ஐபிஎம் முறையில் இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு சமையல்கேஸ் சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை பெற்று சிலிண்டர்களை வினியோகம் செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது.

சிலிண்டர் மானியம்

இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்படி இண்டேன் வாடிக்கையாளர்கள் சமையல் கேஸ் முன்பதிவு செய்ய  குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண் குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்து வந்தனர்.  அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும் முன்பதிவு செய்யலாம். இது தவிர  75888-88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

வணிக சிலிண்டர்
இதன் மூலம் முன்பதிவு செய்யப்படும் சிலிண்டர்கள்  விரைவில் விநியோகம் செய்யப்படும். அத்துடன் தற்போது எழுந்துள்ள நடைமுறை சிக்கலும் விரைவில் களையப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று  முதல் அழைப்புகளை ஏற்று வழக்கம் போல் சேவைகள் தொடரும். திடீரென கணினி செயலிழப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web