ஜூலை 31 வரை தடை உத்தரவு!! கள்ளக்குறிச்சியில் தொடரும் பதற்றநிலை!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவருடைய மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருடைய பெயர் ஸ்ரீமதி. இவர், நேற்று முன்தினம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணி நடத்த இருந்த அவர்களை காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். காவல்துறைக்கும் , பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனையடுத்து, கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் . பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலை முதலே பெரும் கலவரமாக மாறியுள்ளது. போராட்டத்தில் காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியும், காவல்துறையினர் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் படுகாயமடைந்துள்ளார்.
Kallakurichi violence | Tamil Nadu School Education Department orders Kallakurichi Chief Education Officer to submit a detailed report on the incident
— ANI (@ANI) July 17, 2022
இந்தப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.காவல்துறை மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கலவரக்காரர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடினர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனை அடுத்து, கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?
