கதறிய பெண் தாசில்தாருக்கு நூதன தண்டனை!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
உயர்நீதிமன்றம்

முருகன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள கடலாடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று கடந்த 2017 டிசம்பர் மாதத்திலேயே உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி முருகன் மீண்டும் 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

திருவண்ணாமலை

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து தமிழக அரசு தெரிவித்த பதிலில், 4 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று  உறுதியளித்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த வழக்கு கடந்த 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் அவற்றை அகற்றாதது நீதிமன்றத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் செயலையே காட்டுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு சிறை தண்டனை விதிக்கப் போகிறோம்’’ என்று அதிரடியாக அறிவித்தனர்.

இது குறித்து மீண்டும் தமிழக அரசு வெளியிட்ட பதிலில், 2 நாட்களில் ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்ப்பட்டுவிடும்’’ என்று கூறியது. ஆனால் நீதிபதிகள் இந்த பதிலை ஏற்க மறுத்ததுடன், கலசப்பாக்கம் தாலுகாவில் அப்போது பணிபுரிந்த பெண் வட்டாட்சியரை இந்த வழக்கில் குற்றவாளி என அறிவித்தது.மேலும் அதற்கான தண்டனை விவரங்களை 5ம் தேதி அறிவிப்போம். எனவே அவர் கோர்ட்டில் நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவை பிறப்பித்தனர்.கடந்த 2018ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் எத்தனை முறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாலும் அவர்கள் தொடர்ந்து அதனை அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது நாங்கள் எடுத்து இருக்கும் நடவடிக்கை வெறும் ஆரம்பம்தான்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

court order
இந்நிலையில் நீதிமன்றத்தில் பெண் தாசில்தார் தரப்பில் ஆஜரான வக்கீல், நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பின்னர் 3 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. பெண் தாசில்தார் என்ற பொறுப்பை கருத்தில் கொண்டு அவரை சிறைக்கு அனுப்பினால், அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஏற்படும் தலைகுனிவை பார்க்க வேண்டும். எனவே சிறிய அளவிலான தண்டனையை வேண்டுமென்றால் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். தாசில்தார் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் நூதன முறையில் தண்டனையை அறிவித்தனர். அதன்படி இன்று மாலை நீதிமன்றம் முடியும் நேரம் வரை பெண் தாசில்தார் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பெண் தாசில்தாருக்கு வழங்கப்பட்ட நூதன  தண்டனை குறித்து பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தார் லலிதா அப்போது நீதிமன்றத்தின் முன்பு கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web