போட்றா வெடிய !! ட்விட்டரில் எடிட் பட்டன்!! புத்தம் புது வெர்ஷன்!!

 
ட்விட்டர்

ட்விட்டர் நாளுக்கு நாள் புதிய புதுப்பிப்புகளை கொண்டு வருகிறது. சந்தையில் போட்டியில் இருக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் தாக்குப்பிடிக்க நிறுவனம் புதுவரவுகளை பயனர்களுக்காக அறிமுகம் செய்கிறது.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் எடிட் ஆப்ஷன் இருந்தபோதிலும் ட்விட்டரில் இந்த ஆப்ஷன் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது. இந்த வசதியை விரைவில் கொண்டுவருமாறு பயனாளர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

ட்விட்டர்

இந்நிலையில், டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், வரும் வாரங்களில் முதல் கட்டமாக புளூ டிக் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் கட்டண சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன்படி ப்ளூ பயனர்கள் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர்

இதுகுறித்து ட்விட்டர் கூறுகையில், “நேர வரம்பு மற்றும் பதிவு திருத்தம் முக்கிய பங்கு வகிக்கும். ட்விட் உரையாடலின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உதவும். யார் என்ன பதிவிட்டுள்ளார்கள் என்பதும் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி பொதுதளத்தில் இருக்கும்” என தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web