அப்படி போடு!! தொடர் சரிவில் தங்கத்தின் விலை !! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த  3 நாட்களாக குறைந்து வருகிறது. மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை விதித்த பிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. சில நாட்கள் குறைந்தாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை  2 மடங்காக ஏறிவிடுகிறது. இருந்தாலும் தங்கத்தின் விலை இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம்

சென்னையில் கடந்த 3 நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்தது விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 4701க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு  ரூ.192-க்கு குறைந்து விற்பனை செய்யப்பட்ட  நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 21 ரூபாய் குறைந்து, ரூ.4,680க்கும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, ரூ.37,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,851-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் குறைந்து, ரூ.3,834-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ61.10க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web