காதல் கணவரோட சேர்த்து வையுங்க.. இளம்பெண் தந்தையுடன் சேர்ந்து தர்ணா போராட்டம்!

 
நர்மதா

காதலித்து, வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணமும் செய்து கொண்டு, தனிக்குடித்தனம் நடத்துற அளவுக்கு தைரியமிருந்த அவருக்கு இப்போ.. சாதி தடையா இருக்கு. சாதியைக் காரணமா சொல்லி என்னை விட்டு விலகுறாரு’ என்று கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் நர்மா. திருச்சி மாவட்டம், முசிறியில் வசித்து வருபவர் மருதை வீரன். அவரது மகள் நர்மதா (28).  இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த  பாண்டியன் நகரில் வசித்து வரும் இளைஞர்  ஹரிராஜூவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு ரிஜிஸ்டர் ஆபிசில் பதிவும் செய்து கொண்டனர். இதன் பிறகு  அலைபாயுதே பட பாணியில் ஹரிராஜ் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

போலீஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து ஹரிராஜூம், நர்மதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இடையில் ஆடி மாதம் வந்ததால் நர்மதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.  மீண்டும் வீட்டிற்கு வந்த போது சாதியை காரணம் காட்டி நர்மதாவை, அவரது காதல் கணவர் ஹரிராஜ் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஹரிராஜும், அவரது பெற்றோரும்  நர்மதாவை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்துள்ளனர்.

போலீஸ்

இது குறித்து நர்மதா திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கொங்கு நகர் சரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  காதல் தம்பதியரை வரவழைத்து சமரசம் பேசிய காவல் துறையினர்  இருவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தனியே சென்றுள்ளார் ஹரிராஜூ. இதன் பிறகு நர்மதா மீண்டும் மகளிர் காவல் நிலையத்தை  அணுகிய போது காவல் துறையினர்  சரிவர பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து நர்மதா தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி பாண்டியன் நகரில் உள்ள கணவர் வீட்டின் முன்பு தனது தந்தை மருதை வீரனுடன் சேர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web