தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி திடீர் ரத்து!

 
ஆர்எஸ்எஸ்

நாளை தமிழ்நாட்டில் நடைப்பெற இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீரென ரத்து செய்யப்பட்டு, வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ காவல் துறை, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றம் சென்று,கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாங்குநேரியை தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்திக் கொள்ள அனுமதி வாங்கிய நிலையில், திடீரென நாளைய பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நாளை நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட்டது.  அதன்படி "கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்

மற்ற 47 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என அரசு மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில்  காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என செப்டம்பர் 30ம் தேதி கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு தமிழகத்தில் வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் எனவும்  அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள  24 இடங்களில் அனுமதி வழங்கும் சூழல் தற்போது கிடையாது எனக் கூறியுள்ளார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அதிலும் நடப்பு வாரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது என விளக்கம் அளித்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து நவம்பர் 4ம் தேதி முடிவு எடுக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாங்குநேரியை தவிர மற்ற 44 இடங்களில்  ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில், நாளைய பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web