இன்று முதல் 19 நாட்களுக்கு ராகுல் காந்தி, கேரளாவில் நடைபயணம்!

 
ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7ம் தேதி துவங்கிய ராகுல் காந்தி, தமிழகத்தில் நடைபயணத்தை முடித்துக் கொண்டு,  இன்று முதல் அடுத்த 19 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொள்கிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிமீ பயணித்து காஷ்மீரில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

ராகுல் காந்தி

தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, நடைபயணத்திற்கு வரவேற்பு கொடுத்த மக்களுக்கு தெரிவித்து, பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்வதாக தெரிவித்தார். 4 நாட்கள் தமிழக நடைபயணம் வெற்றிகரமாக அமைந்ததாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இன்று முதல் 19 நாட்களுக்கு 7 மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். 

தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலையில் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட கேரள மாநில காங்கிரஸார் நேற்றே திரண்டனர். இன்று பாறசாலையில் பிரம்மாண்ட வரவேற்புக்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ராகுல் காந்தி

பாறசாலை - திருவனந்தபுரம் - திருச்சூர் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், திருச்சூரில் இருந்து நிலாம்பூர் வரை மாநில நெடுஞ்சாலைகள் வழியாகவும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் 14ம் தேதி வரை திருவனந்தபுரத்திலும், 14ம் தேதி மதியம் முதல் 17ம் தேதி வரை கொல்லம் மாவட்டத்திலும், 17 முதல் 20 வரை  ஆலப்புழா, 21, 22 தேதிகளில் எர்ணாகுளம், 23 முதல் 25 தேதி வரை திருச்சூர், 26, 27 தேதிகளில் பாலக்காடு, 28, 29 தேதிகளில் மலப்புரம் மாவட்டத்திலும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web