பாகிஸ்தான் சீனா இடையே ரயில் போக்குவரத்து?! வர்த்தக ஒப்பந்தம் !!

 
பாகிஸ்தான் சீனா ரயில்

பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம் செய்ய சீனா சமீபகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் துறைமுகங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை இரு நாடுகளுக்கிடையே உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வர்த்தக முக்கியத்துவம் பெற்றது அரபிக்கடல். அதனுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சீனாவும், பாகிஸ்தானும் திட்டமிட்டு வருகின்றன.  அதன்படி பொருளாதார சாலை திட்டத்தை ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடியில் சீனா மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தான் சீனா ரயில்

இந்த திட்டத்தின் மூலம் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகமும், சீனாவின் மேற்கு பகுதியும் இணைக்கப்பட உள்ளது. இதற்காக கட்டுமான பணிகளை பாகிஸ்தானில் மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.இது குறித்து பாகிஸ்தானில் உள்ளூர் ஊடகங்கள் கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இந்த திட்டத்தின்படி  பெஷாவருக்கு 1,554 கி.மீட்டருக்கு ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சீனா

 நவம்பர் மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சீனா செல்ல உள்ளார். அப்போது உயர்மட்ட குழுவுடன் சீனா செல்லும் அவர் அங்கு ரூ.82,415 கோடி மதிப்பிலான புதிய திட்டம் தொடர்பாக இருதரப்பிலும் கையெழுத்தாக உள்ளதாக இரு நாட்டில் இருந்தும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் பாகிஸ்தான்& சீனா இடையேயான வர்த்தகம் இன்னும் வலுப்படும் என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web