மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! கனமழைக்கு 6 பேர் பலி!!

 
கனமழை

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக 6 பேர் பலியாகியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

மழை

கேரள மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில ப டைகளின் அவசர கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை ஒருங்கிணைக்க அவசர பிரிவை மாநில அரசு தயார் நிலையில் வைத்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருவதால் அங்கேயும் சில மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் தொடர் மழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்றும் தொடரும் ரெட் அலர்ட்!!

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். எனவே இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web