ராஜா ராணி சீரியல் நடிகருக்கு திடீர் திருமணம்! குவியும் வாழ்த்துகள்!

 
பாலாஜி தியாகராஜன்

ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் நடிகர் பாலாஜி தியாகராஜனுக்கு இன்று காலை திருமணம் நடந்தேறியது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் வந்திருந்து வாழ்த்தினார்கள். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதாநாயனாக சித்து நடித்து வருகின்றார். கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்தார்.

பாலாஜி தியாகராஜன்

மேலும் ஆல்யாவுக்கு தற்பொழுது இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் இவருக்குப் பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகின்றார்.

இந்த தொடரில் ஹீரோ சரவணனின் தம்பி, செந்திலாக நடித்து வருபவர் பாலாஜி தியாகராஜன். இவர் சீரியல் மட்டுமல்லாமல், குறும்படம், யூ-ட்யூப் வெப் சீரிஸ் என பிஸியாக வலம் வருகிறார்.

பாலாஜி தியாகராஜன்

இந்நிலையில் அவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. அதில் ராஜா ராணி 2 குழுவினர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அந்தப் படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web