அமெரிக்காவில் சோழப் பேரரசின் ராஜமாதா செம்பியன் மாதேவி சிலை?! விரைவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை!!

 
செம்பியன் மாதேவி


இந்தியாவில் இருந்து திருடப்பட்ட செம்பியன் மகாதேவியின் உண்மையான சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சிலை போலியானது என்று வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு சிலை, வைரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பலரால் திருடப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு முயற்சிகளின் பலனாக தற்போது அவை நம் நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருப்பது பெரும் வரவேற்கத்தக்கது.அந்த வகையில், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில்  Freer Gallery of Art அருங்காட்சியகத்தில் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சோழ வம்சத்தை சேர்ந்த 1,000 வருடத்திற்கும் மேல் பழமையான செம்பியன் மகாதேவி உலோக சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து சர்வதேச நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். 

செம்பியன் மாதேவி

சிலை கடத்தல் குறித்து தடுப்பு பிரிவு போலீசார் கூறும்போது, ‘‘நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தற்போது உள்ள சிலை போலியானது. கடந்த 10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்டுள்ளது. ஆனால் இதனை பலரும் 1959ம் ஆண்டுக்கு பிறகு திருடப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த சிலை 1929ம் ஆண்டுக்கு முன்பே திருடப்பட்டுள்ளது. 

செம்பியன் மாதேவி சிலையை ஹாகோப் கெவோர்கியன் என்பவர் 1929ம் ஆண்டு திருடிச் சென்றுள்ளதாக சான்றுகள் உள்ளன. . பின்னர் அது வாஷிங்டன் டிசியில் உள்ள ப்ரீயர் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டுள்ளது. நாடு விட்டு நாடு நடந்த கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. 

செம்பியன் மாதேவி

ஏனென்றால் சிலை திருடப்பட்ட காலகட்டத்தில், அதாவது 1929ம், ஆண்டுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை என்பதே வழக்கத்தில் இல்லை. இந்திய நாட்டு சுதந்திரத்திற்கு முன்பு சென்பியன் மகாதேவி சிலை திருடுபோயுள்ளது. அது தற்போது  அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதனை பத்திரமாக எந்தவித சட்டசிக்கல்களும் இல்லாமல் இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினர்.இந்தியாவின் பொக்கிஷமான 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பியன் மகாதேவி சிலை மீண்டும் தாயகம் திரும்பும் நாள் வெகு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web