ரஜினி ஆளுநர் ரவி திடீர் சந்திப்பு!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
ர

நடிகர் ரஜினிகாந்த், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திடீரென்று சந்தித்து பேசிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மரியாதைந நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படும் போதிலும் அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் நடைபெற உள்ள 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிய நிலையில் அதற்கு அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெய்லர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின.

தற்போது ஜெய்லர் படத்தின் எழுத்துப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் திடீரென டெல்லி சென்று திரும்பி இருந்தார்.அதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசிள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ரவி


நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா 2வது முறையாக கர்ப்பமானதைத் தொடர்ந்து மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்ற வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினிகாந்த் 4வது முறையாக  தாத்தாவாக உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 6ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்து பேசினார்.  அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என் ரவி குடியரசுத் தலைவர் மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web