பிஜேபியில் இணையும் ரஜினி கட்சி ஒருங்கிணைப்பாளர்!! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

 
ரஜினி

 

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவரான அர்ஜூன் மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், தனது கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அர்ஜூன் மூர்த்தி என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது இது பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினி

இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. 

வேளாண் சட்டங்களுக்கு ஒரு காலம் வரும்: அண்ணாமலை

இதையடுத்து அர்ஜூன் மூர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். தொடர்ந்து ரஜினியுடன் நட்புடன் பழகி வந்தார்.

இந்நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று மதியம் 1 மணிக்கு கமலாலயத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web