தனி விமானத்தில் சென்ற ரஜினி! நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது!

 
ரஜினி

இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் 67வது கன்னட ராஜ்யோத்சவ விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கன்னட ரத்னா விருது வழங்கப்படுகிறது. அதே விழாவில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன், நடிகர்கள் தத்தன்னா, அவினாஷ், சிஹி கஹி சந்துரு உள்ளிட்ட 67 பேருக்கு  ராஜ்யோத்சவா விருது வழங்கப்படுகிறது. 

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கன்னட ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவுக்கு தனி விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார்.

ஒவ்வொரு வருடமும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் 67வது கன்னட ராஜ்யோத்சவ விழா கொண்டாடப்படுவதையொட்டி, விருது பெற்றவர்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. 

கர்நாடக அரசு

கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் வி சுனில் குமார் இது குறித்து அறிவிக்கையில், “முறையான அங்கீகாரம் இல்லாமல் பணிபுரியும் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்குவதில் தேர்வுக் குழு கடினமான பணியை மேற்கொண்டுள்ளது” என்றார். பிராந்திய சமநிலையை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சாதனையாளர்களை கண்டறிந்து, இந்த விருதுக்கான பட்டியலுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கர்நாடக அரசு

எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் அர்த்தம். சோலிகா சமூகத்தினரிடையே கூட்டுறவுகளை பிரபலப்படுத்திய சோலிகர மாதம்மா, சாலுமரதா நிங்கண்ணா (சுற்றுச்சூழல் ஆர்வலர்), யக்ஷகானா கலைஞர் டாக்டர் எம் பிரபாகர் ஜோஷி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மதன் கோபால், எழுத்தாளர்கள் ஏஆர் மித்ரா மற்றும் பேராசிரியர் கிருஷ்ணகவுடா, மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ராகவேந்தர் அன்வேகர் உள்ளிட்ட பலரும் விருது பெற்றவர்களில் அடங்குவர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web