ராஜீவ் கொலை வழக்கு! விடுதலையானவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை! கலெக்டர் பேட்டி!

 
முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் விரைவில் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
 
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆனவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் திருச்சி மத்திய சிறை சிறப்பு  முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால், சிறப்பு முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறியதாவது.... அவர்களுக்கு தேவையான நடைபாதை உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அவர்கள்அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. 

திருச்சி ஆட்சியர்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு மத்திய சிறையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலோ, பெயில் வாங்கினாலோ சொந்த நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். குடும்ப உறவுகளோ, உறவினர்களோ சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற்று தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கலாம். மொபைல் போன் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்துக் கொள்ள இங்கு தங்கி இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. 

தற்போது விடுதலையாகி, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நாட்டினர் தானா என்பதை உறுதி செய்து எங்களுக்கு தகவல் அனுப்பிய பின் இன்னும் பத்து நாட்களில், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விடுதலை செய்யப்பட்ட நால்வரில ஒருவர் மட்டுமே சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web