ராமஜெயம் கொலை வழக்கு.. உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகும் 6 ரவுடிகள்! இன்று முழு உடல் பரிசோதனை!

 
ராமஜெயம்

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தபோது  கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிஐ விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் தற்பொழுது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை  SIT  எஸ் பி ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி மதன்குமார் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம்

இந்நிலையில்  கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையானது கடந்த 01.11.2022, 14, மற்றும் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை நடைபெறும் போது தங்கள் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் இருக்க வேண்டுமென நீதிபதியிடம் கூறினார்.

இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர் ஆகிய 6 (ரவுடிகள்)நபர்கள் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்ய வந்தனர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆறு நபர்களிடம் ரத்தம் ,சிறுநீர்,இசிஜி இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை(19.11.2022) நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன் ,தினேஷ் மாரிமுத்து ஆகிய ஐந்து பேருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லெப்ட் செந்தில் கணவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி பரிசோதனை  செய்யப்பட்டது.

ராமஜெயம்

மேலும் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு இதன் சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நாள் மற்றும் அனுமதியை அனுமதி நீதிபதி 21 ஆம் தேதி அறிவிப்பார். ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி சிறப்பு புலனாய் குழுவினர் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என தெரிய வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web