எம்எல்ஏ ஆகிறார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!!

 
ரிவாபா ஜடேஜா

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின.  182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது.

ரிவாபா ஜடேஜா

இதனிடையே ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக ரிவாபா ஜடேஜா களமிறக்கப்பட்டிருந்தார். ரிவாபா ஜடேஜாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனபா ஜடேஜாவை காங்கிரஸ் தனது வேட்பாளராக களமிறக்கியது. ரிவாபாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா காலை முதல் முன்னிலை வகித்து வந்தார். 

ரிவாபா ஜடேஜா

ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 56.75 சதவிகிதத்தை இதுவரை ரிவாபா பெற்றுள்ளதால் இவரது வெற்றி உறுதியாகியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் 23 சதவிகிதம், காங்கிரஸ் வேட்பாளர் 15 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளனர்.

From around the web