வாசகர்கள் வரவேற்பு !! 3808 நூலகங்களை புதுப்பிக்க அரசாணை வெளியீடு!!

 
நூலகங்கள்

இளைய தலைமுறையினர் ஆன்லைன் மூலம் கல்வி, மொபைலில் கதை கேட்டல், பாடம் படித்தல் என அனைத்தும் தொழில்நுப்டம் மூலமே தேடி வருகின்றனர்.இதனால் புத்தகம் எடுத்து வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

நூலகங்கள்

பள்ளிகள், கல்லூரிகளில் நூலகம் அமைத்து மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க பள்ளி நிர்வாகங்களும், அரசும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கல்வி, தொழில் மற்றும் பொழுது போக்கு சம்பந்தமாக வாசகர்கள் பலர் நூலகங்களை நாடி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

நூலகங்கள்
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த  அரசாணையில் ‘‘தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் தமிழகம் முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2021&-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீதமுள்ள நூலகங்கள் 2024ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்பட்டு விடும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web