குட்டிக்கதை கேட்க தயார் !! வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!!

 
வாரிசு


தமிழ் திரையுலகில் இளையதளபதியாக தனிமுத்திரை பதித்தவர் நடிகர் விஜய். இவரது படங்கள் உருவாவது முதல் ரிலீஸ் வரை ரசிகர்களுக்கு உற்சாக கொண்டாட்டம் தான். அதே போல் விஜய் படங்கள் வெளியாகும் முன் அதன் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த விழாவில் தளபதி தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதையும் கூறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

வாரிசு

இதற்கு முன் 2021ல் வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.நடப்பாண்டில் குறிப்பிட்ட சில காரணங்களால் ‘பீஸ்ட்’ பட இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்ததாக பதிவிட்டிருந்தனர். ரசிகர்களின் மனக்குறையை போக்கும் வகையில் இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய்யுடன் நேர்காணல்  செய்வது போன்ற நிகழ்வு மட்டும் நடத்தப்பட்டது. 

விஜய் ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்!  HBD விஜய் ஸ்டார்ட்ஸ்!
இந்நிலையில், தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி,  வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகியுள்ளது.இந்த வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு விஜய் என்ன குட்டி கதை கூற போகிறார் என்பதை  கேட்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் , ஆர்வத்துடனும்  உள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web