நெகிழ்ச்சி!! அக்கா உயிரிழந்த செய்தியை கேட்டு தானும் உயிரை விட்ட தங்கை!! மரணத்திலும் ஒன்று சேர்ந்த பாசமலர்கள்!!

 
கனக்கம்மா, ராதாம்மா

பிறந்தவீட்டு பாசம் என்றவுடனே நினைவுக்கு வருவது பாசமலர்கள் திரைப்படம். அந்த படத்தில் அண்ணன் உயிரிழந்த துக்கம் தாளாமல் தங்கை சாவித்திரியும் அதே இடத்தில் தம் உயிரை விட்டுவிடுவார். இருவரும் அத்தனை பாசுப்பிணைப்புடன் இருப்பார்கள். அதேபோல் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையிலும் அரங்கேறியுள்ளது. ராதாம்மா மற்றும் கனக்கம்மா இருவரும் சிறுவயதில் இணைபிரியா சகோதரிகள்.

காலம் கடந்த பின்னும் கதம்பமாலையாய் மணம் வீசும் பாசமலர்!

இதில் ராதாம்மா சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் சென்னையாவை திருமணம் செய்து கொண்டார் .இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ராதாம்மா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அக்கா இறந்த செய்தியை  தங்கைக்கு அறிவித்தனர். தங்கை  கணக்கம்மா, அக்கா உயிரிழந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

rip

சிறிது நேரத்தில் அப்படியே, இருந்த இடத்தில் சுருண்டு கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள், கனக்கம்மா மயக்கம் அடைந்திருப்பார் என  நினைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து சுற்றி இருந்த அனைவரும் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். ஆனால், கனக்கம்மா அக்கா இழந்த செய்தியை கேட்டதும் உயிரை விட்டு விட்டார் என்பது அதன் பிறகு தான்  தெரியவந்தது. அக்கா உயிரிழந்த  செய்தியை கேட்டதும்  துக்கம் தாளாமல் தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!