நெகிழ்ச்சி! மாலத்தீவில் காதல்.. மலேசிய காதலியை பாரம்பரிய தமிழ்முறைப்படி திருமணம் செய்த ராமநாதபுரம் இளைஞர்!

 
அருண்செல்வம்

மலேசியாவைச் சேர்ந்த தனது காதலியை, அவரது விருப்பத்தின் பேரில் பாரம்பரிய வாத்தியங்கள் இசைக்க தமிழ் முறைப்படி திருமணம் என்பது அசத்தியிருக்கிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண் செல்வம். ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடத்தைச் சேர்ந்தவர் அருண்செல்வம். இவர் மாலத்தீவில் ஹோட்டல் ஒன்றில்  வேலைப் பார்த்து வந்தார்.  அப்போது அதே ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்த மலேசிய பெண் யீஷ்யானுடன் நட்பாக பழகி  வந்துள்ளார். நாளடைவில் யீஷ்யானும் அருண்செல்வமும் காதலர்களாக மாறியுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

திருமணம் கல்யாணம் கும்பம்

இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்திய கலாசாரத்தின் மீது விருப்பம் கொண்ட யீஷ்யான் தமிழகத்தில் திருமணம் செய்துக் கொள்ள விரும்பியதால் இரண்டு குடும்பத்தார் சம்மதத்துடன் அருண்செல்வத்தின் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இந்து முறைப்படி அருண்செல்வம் யீஷ்யான் கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக் கொண்டார்.

5வது திருமணம்

பின்னர் மணமகன் செண்டை மேளம் இசைக்க, மணமகள் சிங்கியும் இசைத்து மகிழ்ந்தனர். இவர்களது திருமணத்தை கண்டு மகிழ்ந்த குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

From around the web