நெகிழ்ச்சி!! 6 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவன் ஆதாரால் அடையாளம்!!

 
சிறுவன்


பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் (பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்) காணாமல் போனார். அதன்பின்னர் அதே ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூர் ரயில் நிலையத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். இருப்பினும் இந்த சிறுவனுக்கு பேச்சு மற்றும் கேட்புத்திறன் இல்லாததால் ரயில்வே அதிகாரிகள் நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சிறுவனை ஒப்படைத்து சிறுவனின் குடும்பத்தை அடையாளம் காண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆதார்

அந்த சிறுவனுக்கு காப்பகத்தின் சார்பில் பிரேம் ரமேஷ் இங்காலே என்று பெயர் சூட்டப்பட்டது. சிறுவன் தற்போது 21 வயது சிறுவனாக வளர்ந்துள்ளான். கடந்த 6 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வந்த நிலையில் இந்தப் பெயரை ஆதாருக்கு பதிவு செய்ய அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் இந்த மாதம் முயற்சி மேற்கொண்டார். 

போலீஸ்

அந்த இளைஞரின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து  ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு அந்த அதிகாரி நேரில் சென்று தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் 6 ஆண்டுகளாக காப்பக்கத்தில் பராமரிக்கப்பட்ட இளைஞர் பிகாரின் ககாரியா மாவட்டத்தில் காணாமல் போன சச்சின் குமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதார் கார்டு தகவலின்படி அவரது முகவரியை கண்டறிந்து பின்னர் அந்த இளைஞர் தனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web