நெகிழ்ச்சி!! 7 மாதங்கள் கோமாவில் இருந்த கர்ப்பிணிக்கு பெண்குழந்தை!!

 
கர்ப்பிணி

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷாகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 23 வயதான பெண் ஒருவர் தனது கணவனருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அப்போது இளம்பெண் ஹெல்மெட் அணியாததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இருப்பினும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். இளம்பெண்ணின் கண்கள் மட்டுமே திறந்திருந்த நிலையில் அவரது உடலில எந்தவித அசைவும் இல்லை.

கர்ப்பிணி

விபத்து நடந்த போது இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இருப்பினும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லாததால் அந்த கருவை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 7 மாதங்களாக கோமா நிலையில் இருந்த பெண்ணின் வயிற்றில் கரு நல்ல முறையில் வளர்ந்தது.

வாடகை கட்டிடத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்!

இந்நிலையில் கோமாவில் இருந்த இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியான நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்க முடியாத காரணத்தால் குழந்தை தற்போது பாட்டிலில் பால் குடித்து வருகிறது’’ என்று தெரிவித்தனர். கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அந்த பெண் கோமாவில் இருந்து மீண்டு குழந்தையை பராமரித்து வளர்க்க வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள், நண்பர்கள்ள்  பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web