நெகிழ்ச்சி வீடியோ!! குழந்தையை சுமந்து கொண்டே ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி!!

 
ரிக்‌ஷா

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சியோனி மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் தங்களது குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கைக்குழந்தையும் கணவரையும் விட்டு சென்றதாக செய்திகள் கூறுகிறது. தன்னுடைய மனைவி எங்கே சென்றார் என தேடுவது தேவையில்லாத விஷயம் என்பதால் அந்த முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.


மேலும் தன்னுடைய குழந்தைகளைப் பராமரிப்பதற்கு யாருமே தன்னுடன் இல்லை என்ற போதும், எப்படியாவது தனது இரு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் அதிகளவில் இருந்துள்ளது. எனவே, தங்களது வாழ்வாதாரத்திற்காக மத்திய பிரதேச மாநிலத்திற்கு வந்த ராஜேஷ், தெரிந்த வேலைகளை செய்து வந்துள்ளார். 
பின்னர் சைக்கிள் ரிக்சா ஓட்டுவது என முடிவெடுத்த அவர், தனது குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக, தன்னுடை கைக்குழந்தையை தோளில் சுமந்து சைக்கிள் ரிக்சா ஓட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் வலம் வருகிறார்.

ஒரு கையில் குழந்தையை ஏந்தியும், மற்றொரு கையில் சைக்கிள் ரிக்சாவை போலன்ஸ் செய்து சாலையில் வலம் வரும் காட்சியில் நெஞ்சை ரணமாக்குகிறது. அதிலும் குழந்தையின் மேல் ஓட்டுத் துணிக்கூட இல்லை. இந்த காட்சியை வீடியோவாக எடுத்த இணையவாசி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், இந்த நபருக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும் எனவும் பார்ப்பதற்கே நெஞ்சை ரணமாக்குகிறது என பதிவிட்டுள்ளனர். மற்றொரு பயனர் ஒருவர், “அவருக்காக ஒரு க்ரவுட் ஃபண்டிங் பிரச்சாரத்தை ஏற்படுத்துவோம்” எனவும் குறைந்த பட்ச நிதியுதவி அளிக்க முன்வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு ட்விட்டர் பயனர் எப்படி இந்த நபரை நாம் கண்டுபிடிப்பது? என கேள்வியெழுப்பியுள்ளார். என்னவாயினும் நிச்சயம் இவருக்கு நம் உதவியைக் கொடுக்க வேண்டும் எனவும் இணையவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web