அனைத்து வீரர்களுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு! சவுதி அரேபிய மன்னர் அதிரடி!

 
சவுதி மன்னர்

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் திருவிழாவைப் போல உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை விட, அதிகளவில் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்து. இந்நிலையில், கால்பந்து விளையாட்டுகளில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை தோற்கடித்த சவுதி அரேபியா அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10 கோடி  மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிப்பதாக சவுதி  மன்னர் அறிவித்துள்ளார். கத்தாரில், 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்று உலக கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற சவுதி அரேபியா அணி வீரர்களைப் பாராட்டும் வகையிலும், நாட்டு  மக்கள் இந்த வெற்றியை முழுதாக அனுபவிக்கும் வகையிலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவூத் சவூத் உத்தரவிட்டிருந்தார்.

சவுதி மன்னர்

தற்போது, கால்பந்து விளையாட்டில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சவுதி அரேபியா கால்பந்து

அனியின் வீரர்கள் கத்தாரில் இருந்து திரும்பி வந்தவுடன் அவர்களுக்கு கார் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web