கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம்!! ஒருவருக்கு அரசு வேலை!!

 
பிரியா

சென்னையில் வியாசர்பாடியில் வசித்துவரும் தம்பதி ரவிக்குமார்-உஷாராணி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இதில் மகள் பிரியா சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகுந்த ஏழையான குடும்பமாக இருந்தாலும் மகளின் கனவை நனவாக்க 6ம் வகுப்பு முதல் ப்ரியாவை பள்ளி கால்பந்து குழுவில் சேர்த்து விட்டனர். ஆர்வத்துடன் திறமையும் சேர்ந்து இருந்ததால் பிரியா விரைவில் முன்னேற்றம் பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடத் தொடங்கியிருந்தார். 

கால்பந்து வீராங்கனை பிரியா தேசிய அளவிலான  விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை பெற்றுள்ளார். இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது.

ப்ரியா

மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் பிரியாவுக்கு காலில் வலி மட்டும் குறையவே இல்லை . இதனால் மறுபடியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று செய்த பரிசோதனையில் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற விட மருத்துவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் எனக்கூறி பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

rip

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த செய்திக்குறிப்பில்  தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் எனவும், அதன்பிறகு அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்திருந்தார். அவரின்  உத்தரவுப்படி  மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் . இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக  மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த அறிக்கையில் இந்த அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web