ரேஷன் கார்டுக்கு ரூ1000 நிவாரணத் தொகை !! முதல்வர் அதிரடி!!

 
பணம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29 முதல் தொடர் மழை பெய்தது. இதனையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்தது. தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரலாறு காணாத வகையில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை வெளுத்து வாங்கியது.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம் தொடங்கி வைப்பு!! முதல்வர் அதிரடி!!

குடியிருப்புப் பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார். அதன்பிறகு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன் கனமழையால் சேதம் அடைந்த பயிர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக  தனித் தீவு போல் காட்சியளிக்கிறது.  

ஸ்டாலின்
கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இன்று  மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அணைத்து விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web